மாவட்டம் முழுவதும் 27 கொரோனா கட்டுப்பாட்டு குழு

பரமக்குடி, ஏப்.10: ராமநாதபுரம் மாவட்டத்தில் 27 கொரோனா கட்டுப்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பரமக்குடி பேருந்து நிலையம், காந்தி சிலை, நகைக்கடை பஜார், தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். வணிக நிறுவனங்கள், வங்கிகள், பேருந்துகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். பேருந்துகளில் முககவசம் அணியாமல் பயணம் செய்த நடத்துனர், ஓட்டுனர், பயணிகளுக்கு அபராதம் விதித்து கொரோனா தடுப்பு குறித்த  ஆலோசனைகளை வழங்கினர்.

தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்ச் 1ம் தேதி முதல் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து ரூ.7 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 27 கொரோனா கட்டுப்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சுகாதார ஆய்வாளர், காவல்துறை ஆய்வாளர், சுகாதார அலுவலர்கள் ஒவ்வொரு குழுவிலும் பணியில் இருப்பார்கள். பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விப்பட்டது என்றார்.

Related Stories:

>