ஆர்.எஸ்.மங்கலம் அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை பணி ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளது

ஆர்.எஸ்.மங்கலம், ஏப்.10: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ரெகுநாத மடைக்கு செல்லும் சாலையை சீரமைக்கும் பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். விரைவில் சாலையை சரி செய்ய

வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆர்.எஸ். மங்கலம் அருகே ரெகுநாதமடை கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து இளையான்குடி செல்லும் சாலையில் இருந்து  ரெகுநாதமடை கிராமத்திற்கு செல்வதற்கு சாலை வசதி உள்ளது.

இந்த சாலை நீண்ட காலமாக குண்டும் குழியுமாக மாறியிருந்ததை தொடர்ந்து, புதிதாக தார்சாலை அமைப்பதற்காக சாலையோரத்தில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் சாலை அமைக்கும் பணி இன்னும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும், கிராமப் பொதுமக்களும் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் விரைந்து சாலைப்பனியை முடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>