×

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சாயல்குடி, ஏப்.10: சாயல்குடி பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் பங்குனி மாத சிறப்பு பிரதோஷ வழிபாடு நேற்று  நடந்தது.
 பங்குனி மாத சிறப்பு பிரதோஷத்தை முன்னிட்டு திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோயிலுள்ள நந்திதேவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. சாயல்குடி அருகே மாரியூர் பவளநிறவள்ளியம்மன் உடனுறை பூவேந்தியநாதர், மேலக்கிடாரம் சிவகாமிஅம்பாள் உடனுறை திருவனந்தீஸ்வரமுடையார், சாயல்குடி மீனாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி உடனுறை செஞ்சிடைநாதர், மங்களம் ரேணுகாம்பாள் உடனுறை ஆதிசிவன் ஆகிய  கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள், விஷேச பூஜைகள் நடந்தன.
கோயில்களிலுள்ள நந்திதேவருக்கு பல வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு  பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags : Shiva ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...