×

அவனியாபுரம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற மகன் மர்மச்சாவு?

மதுரை, ஏப். 10: மதுரை சோலையழகுபுரம் பாலமுருகனை, கடத்தல் வழக்கில் விசாரிக்க அவனியாபுரம் போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் அவரை அடித்து துன்புறுத்தியதால் பாலமுருகன் இறந்ததாகவும், பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும், நீதிபதி விசாரிக்கவும், உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் பாலமுருகனின் தந்தை முத்துக்கருப்பன் ஐகோர்ட் மதுரை கிளையில் ஏற்கனவே மனு செய்திருந்தார். இது குறித்த விசாரணை நிலுவையில் இருந்தபோது, முத்துகருப்பன் தனது மனுவை வாபஸ் பெற்றார்.
இந்த சம்பவம் குறித்து வக்கீல் ஹென்றிடிபேன், ஐகோர்ட் கிளை நிர்வாக நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், போலீசாரின் அச்சுறுத்தலால் முத்துக்கருப்பன் மனுவை வாபஸ் பெற்றதாக கூறியிருந்தார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில், ஐகோர்ட் கிளை பதிவாளர் தரப்பில் தாமாக முன்வந்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாலமுருகன் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வக்கீல் ஹென்றிடிபேன் ஆஜராகி, மனுவை திரும்ப பெறுமாறு போலீசாருக்கு ஆதரவாக சிலர் போனில் மிரட்டியுள்ளனர்.
அதனால்தான் மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றார். அப்போது கூடுதல் பதிவாளர் ஜெனரல் தரப்பில், ‘மிரட்டல் ஆடியோ உரையாடல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
 இதையடுத்து நீதிபதிகள் போனில் பேசியதாக கூறப்படும் ஆதிநாராயணன், கதிர், லோகநாதன், ரமேஷ் ஆகிய 4 பேரையும் ஆஜர்படுத்த வேண்டும் என போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டு விசாரணையை  ஏப்.17க்கு தள்ளிவைத்தனர்.

Tags : Avaniapuram police ,station ,
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...