மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளியிடம் பணம் வசூலித்த ஊழியர் நீக்கம் சமூக வலைதளங்களில் வைரல்

மதுரை, ஏப். 10:  மதுரை அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளியிடம் பணம் வசூலித்த ஒப்பந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.   இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு உள்ளது. தற்போது கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இந்த வார்டில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பெண் ஊழியர் ஒருவர், நோயாளி ஒருவரிடம் பணம் பெறும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக மருத்துவமனை டீன் சங்குமணி நடத்திய விசாரணையில், ‘ கொரோனா வார்டில் ஒப்பந்த ஊழியர் ஒருவர், நோயாளியிடம் பணம் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் சிலர் கூறுகையில், ‘கொரோனா வார்டில் சுத்தம், சுகாதாரம் இல்லை. படுக்கை வசதி தேவைக்கு இல்லை. சிகிச்சை ஊசிகளை கெஞ்சி வாங்க வேண்டி இருக்கிறது.  நல்ல சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என ஊழியர்களே பேசுகின்றனர். சில ஊழியர்கள் சிகிச்சை வழங்க பணம் பறிக்கின்றனர். டீன் குறை தீர் குழு ஒன்றை கொ ரோனா வார்டில் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழி செய்ய வேண்டும்’’ என்றனர்.

Related Stories:

>