45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் திருமங்கலம் நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தல்

திருமங்கலம், ஏப். 10: திருமங்கலம் நகராட்சியில் வசிக்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், கொரோன தடுப்பூசி கட்டாயம் போடும்படி நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் கட்டுபாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் நகராட்சியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நகர் முழுவதும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர் சுருளிநாதன், சுகாதார அலுவலர் சிக்கந்தர் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் நகராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, நகரில் வசிக்கும் 45 வயதிற்கும் மேற்பட்டவர்கள் கொரோன தடுப்பூசியை அரசு மருத்துவமனைக்கு சென்று போட்டு கொள்ளும்படி அறிவுறுத்தி வருகின்றனர். தடுப்பூசி போட்டு கொள்ள செல்லும்போது தவறாமல் ஆதார் அடையாள அட்டையை எடுத்து செல்லும்படி அறிவறுத்தியுள்ளனர்.

Related Stories:

>