கொரோனா உடையில் வலம் வரும் மர்ம நபர் திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் பரபரப்பு

திண்டுக்கல், ஏப். 10: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் கொரோனா கவச உடையோடு சுற்றித்திரியும் வாலிபரால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடுகின்றனர்.தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவத்துவங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை நள்ளிரவு முதல் அமலாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில்  ஒரே நாளில் 52 ேபருக்கு கொரோனா பரவியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், திண்டுக்கல்லில் கொரோனா கவசஉடையுடன் ஒருவர், பஸ்ஸ்டாண்ட் பகுதியில் சுற்றித் திரிகிறார். விசாரித்த போது அவர் மனநலம் பாதித்தவர் என்றும், குப்பையில் கிடந்த கொரோனா கவச உடையை எடுத்து அணிந்துகொண்டு அவர் சுற்றித்திரிவதாகவும் கூறப்படுகிறது.

 இதனால் பஸ்நிலையம் வரும் பயணிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர். சுகாதாரத்துறையினரை பார்த்ததுடம் மனநோயாளி தப்பியோடி விடுகிறார். அவரை பிடிக்க சுகாதாரத்துறையினர் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் முகாமிட்டுள்ளனர். சுற்றி வருவதால் அனைவரையும் அச்சத்தை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தும் மன நலம் பாதிக்கப்பட்டவர். இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடிக்கின்றனர். இவர் சுகாதாரத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடிவிடுகிறார். இவரைப் பிடிக்கசுகாதாரத்துறையினர் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்டில் முகாமிட்டு உள்ளனர்.

Related Stories:

>