×

சின்னாளபட்டியில் தீவிர ஆய்வு முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம்

சின்னாளபட்டி, ஏப். 10:  சின்னாளபட்டி பிரிவில் மதுரையிலிருந்து வரும் பஸ் மற்றும் வாகனங்களை செயல் அலுவலர் கலையரசி தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் தீவிர ஆய்வு செய்தனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சின்னாளபட்டிக்கு திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், உட்பட தென்மாவட்டங்களிலிருந்து நூற்றுகணக்கானோர் ஜவுளி எடுப்பதற்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக மதுரை மாவட்டத்திலிருந்து அதிக அளவில் வருகின்றனர்.  இவ்வாறு வருபவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமையில் தூய்மை ஆய்வாளர் கணேசன்,   தூய்மை  மேற்பார்வையாளர்கள் சரவணன், அகிலன், மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வரும் பஸ்களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.
முகக்கவசம் அணியாதவரிடம் மறுமுறை வந்தால் கண்டிப்பாக அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறியதோடு நடத்துனரிடம் முகக்கவசம் அணியாமல் பஸ்சில் பயனாளிகளை அனுமதித்தால் நடத்துனர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்தனர். ஒருசிலருக்கு முகக்கவசம் வழங்கி முகக்கவசம் அணியுங்கள் என கூறி அறிவுரை வழங்கினர்.
சின்னாளபட்டி பிரிவில் இறங்கும் மதுரை பயனாளிகளை கைகளை சுத்தம் செய்ய வைத்து தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனை பின்பு அனுமதிக்கின்றனர். பஸ்சில் முகக்கவசம் அணியாமல் வரும் பயனாளிகளிடம் அபராதம் விதிப்பதோடு, நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயல் அலுவலர் கலையரசி அறிவித்துள்ளார்.

Tags : Chinnalapatti ,
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...