வத்தலக்குண்டுவில் பதுக்கப்பட்ட ரூ.1.50 லட்சம் ரேஷன் பாமாயில் பறிமுதல்

வத்தலக்குண்டு, ஏப். 10: வத்தலக்குண்டுவில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 5300 லிட்டர் ரேஷன் பாமாயில் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வத்தலக்குண்டு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் நாகூர் மைதீன்(45). எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். மேலும் வத்தலக்குண்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சில ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் பாமாயில் பாக்கெட்டுகளை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை உடைத்து டின்னில் ஊற்றி விற்று வந்ததாக கூறப்படுகிறது. ரேஷன் கடைகளில் வாங்கும் பாமாயில் பாக்கெட்டுகளை தெற்கு தெருவில் உள்ள அவரது ஒரு குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கடைத்துத.

வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் அந்த குடோனில் சோதனையிட்டனர். அப்போது அங்கு சாக்கு மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 5300 லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் நாகூர்மைதீனையும், ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பாமாயில் பாக்கெட்டுகளையும் உணவு பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related Stories:

>