×

சாணார்பட்டி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரிவேட்டை

கோபால்பட்டி, ஏப்.10: சாணார்பட்டி அருகே முனீஸ்வரன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புலி வேடம் அணிந்து பாரிவேட்டை நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி பஞ்சாயத்தில் முனியப்பசாமி கோயில் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கியமான பாரிவேட்டையாடும் நிகழ்ச்சி கோயில் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
பாரிவேட்டையாடும் பக்தர்கள் வித்தியாசமான முறையில் தலையில் மல்லிகைப் பூ தலைப்பாகை கட்டி உடல் முழுவதும் சந்தனம் பூசி, கையில் வேலுடன் உருமி சத்தத்திற்கேற்ப நடனம் ஆடி கோயிலை வந்தடைந்தனர்.  இதன் பின் பாரி வேட்டை திருவிழா நடைபெற்றது.  இவ்வூரைச் சேர்ந்த வீரச்சாமி என்பவர் கூறுகையில், பல ஆண்டுகளாக இந்த பாரிவேட்டை  நிகழ்ச்சி தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

Tags : Sanarpatti ,
× RELATED கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை மீட்பு