விஷம் குடித்து 2 தொழிலாளர்கள் தற்கொலை

ஈரோடு, ஏப். 10: பெருந்துறை,  கூரபாளையத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (38). இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில்  தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  தர்மராஜூக்கு திருமணமாகி சில மாதங்களிலேயே கணவன், மனைவி இருவரும்  கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டனர். தனியாக வசித்து வந்த  தர்மராஜ் நேற்று வேலை செய்யும் பனியன் கம்பெனிக்கு அருகில் விஷம்  குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதே போல ஈரோடு  செட்டிபாளையம், அண்ணா நகரை சேர்ந்தவர் பச்சியப்பன் (60). மரம் வெட்டும்  தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில்,  நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பச்சியப்பன்  குடிபோதையில் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து  கொண்டார்.

Related Stories:

>