கோபி, பவானிசாகர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் எஸ்பி., ஆய்வு

கோபி, ஏப். 10: கோபி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், கோபி மற்றும் பவானிசாகர் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி. தங்கதுரை ஆய்வு செய்தார்.தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. கோபி மற்றும் பவானிசாகர் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு கோபி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு சுற்றிலும் 32 இடங்களில் கண்காணிப்பு ேகமராக்கள் பொருத்தப்பட்டு தலைமை தேர்தல் ஆணையம் வரை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையம் ஸ்ட்ராங் ரூம் முழுவதும் ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இங்கு 68 ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட எஸ்பி. தங்கதுரை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, ஒரு சில இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.    

Related Stories:

>