சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து ரூ.67ஆயிரம் திருட்டு

சாத்தான்குளம், ஏப்.10: சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து ரூ.67 ஆயிரம் திருடிய மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.  சாத்தான்குளம் அருகே உள்ள பனைவிளை பேச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி வேல்ரதி (55). இவருக்கு 3மகள்கள். அதில் இரு மகள்களுக்கு திருமணமாகியுள்ளது. இவர் முன்பு பழனியில் உள்ள கைத்தறி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது சொந்த ஊரில் இருந்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த 6ம் தேதி சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வீட்டை பூட்டி விட்டு பழனிக்கு சென்று விட்டார். நேற்று அவரது வீடு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உடன் அவரது மருமகன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வேல்ரதி வந்து  பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்து ரூ.62ஆயிரம் மற்றும் உண்டியலில் இருந்த ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து வேல்ரதி தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் எஸ்.ஐ ஐயப்பன் வழக்குபதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Related Stories:

More
>