மாநில வாலிபால் போட்டியில் சாயர்புரம் போப் பள்ளி மாணவர்கள் முதலிடம்

ஏரல், ஏப்.10: சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்று சுழற்கோப்பை பரிசை பெற்றனர். சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான 15வது எல்ஐசி வாலிபால் விளையாட்டு போட்டி நடந்தது. இப்போட்டியில் 13 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 60 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் பங்குபெற்று விளையாடிய தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தில் வெற்றி பெற்று  சுழற்கோப்பை மற்றும் பரிசுகளை பெற்றனர். வெற்றி பெற்ற இந்த மாணவர்களை பள்ளி தாளாளர் ஜெபர்சன் சாமுவேல்ராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்டின், உடற்கல்வி இயக்குநர் பெஞ்சமின் உடற்கல்வி ஆசிரியர் எட்வின், பயிற்சியாளர் நீதியின் சூரியன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

Related Stories:

>