×

நகர, ஒன்றிய, மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

தென்காசி, ஏப்.10: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் தென்காசியில் நகர திமுக, மாவட்ட மருத்துவரணி சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் துவக்கி வைத்தார். நகர செயலாளர் சாதிர் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் மாரிமுத்து, விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் கோமதிநாயகம், வழக்கறிஞரணி அமைப்பாளர் வேலுச்சாமி, நகர நிர்வாகிகள் நடராஜன், சேக்பரீத், பால்ராஜ், கலை பால்துரை, மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், ராமராஜ், மோகன்ராஜ், தங்கபாண்டி, ஜமாலுதீன் பாபு, முகமமதலி, அஷ்ரப்அலி, சுப்பையா, முகைதீன்பிச்சை, அழகிரி, தேவதாஸ், குமார் உட்பட பலர் பங்கேற்றனர். சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். பார்வர்ட் பிளாக் மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், மதிமுக நகர செயலாளர் ஆறுமுகசாமி, திமுக ஒன்றிய செயலாளர் லாலா சங்கரபாண்டியன், சோமசெல்வ பாண்டியன், கண்ணன், மாரிமுத்து, பொறியாளரணி அமைப்பாளர் சங்கர், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புனிதா அஜய்மகேஷ்குமார், முன்னாள் பஞ்.தலைவர் ராசா என்ற ராசையா, சங்கை சரவணன், தொமுச மைக்கேல் நெல்சன், இளைஞரணி சரவணன், ஆதிதிராவிடர் அணி யோசேப்பு, தொண்டரணி காளிசாமி, மகளிரணி அண்ணாமலை, சுப்புத்தாய், ராமு பங்கேற்றனர்.

திருவேங்கடம்:  குருவிகுளம் பஸ்நிலையத்தில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் குருவிகுளம் தெற்கு கடற்கரை, கிழக்கு கிறிஸ்டோபர், மேலநீலிதநல்லூர் வெற்றிவிஜயன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் எஸ்டிகே.குமார்சங்கர், ஜெயக்குமார், தினகரன், பாலசுப்பிரமணியன், ராஜா, ராயப்பன், ஒன்றிய பொறுப்புக்குழு வீமராஜ், இளைஞரணி சுந்தரபாண்டியன், திருவேங்கடம் பேரூர் செயலாளர் பவுல், ஊராட்சி செயலாளர் செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர்.கடையநல்லூர்: கடையநல்லூர் ஒன்றியம் இடைகாலில் மாவட்ட திமுக சார்பில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் இன்பராஜ், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் முகம்மதலி ஜின்னா,  இடைகால் பீர்முகம்மது, அவைத்தலைவர் மாரியப்பன், பொருளாளர் முத்துராமலிங்கம், இளைஞரணி வடிவேல், பழனி, மாரியப்பன், ஸ்டாலின், ராமர், ஜெயபால், மீனாட்சிநாதன், சி.எம்.குமார், ஜெயசீலன், முத்துராமானுஜம், முத்துராமலிங்கம், குட்டி என்ற சீத்தாராமன், கருப்பசாமி, தங்கம், சுரேஷ், தினேஷ், சுதாகர் பங்கேற்றனர்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி