×

கல்லிடைக்குறிச்சி மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா

அம்பை ஏப்.10: கல்லிடைக்குறிச்சி ரஹ்மத் ஜும்ஆ மஸ்ஜித் நூருல் ஹிதாயா மகளிர் அரபிக்கல்லூரி 5,6ம் ஆண்டு முஅல்லிமா பட்டமளிப்பு விழா கீழதைக்கால் தெருவில் நடந்தது. விழாவில் கல்லூரியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு மறைந்தவர்களுக்காக குரான் ஓதி துஆ மஜ்லிஸ் செய்யப்பட்டது. பெண்களுக்காக நடந்த சிறப்பு பயானில் பேராசிரியை ஷிபானா கிராஅத் ஓதினார். பேராசிரியை யாஸ்மியாள் வரவேற்றார். பேராசிரியை ரம்ஜான்பேகம் வாழ்த்துரை வழங்கினார். திருவிடைமருதூர் நூருல் ஹுதா பெண்கள் அரபிக்கல்லூரி முதல்வர் பேராசிரியை மஹ்பூபா தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். பட்டமளிப்பு விழாவிற்கு ரஹ்மத் ஜும்ஆ மஸ்ஜித் ஜமாத் தலைவர் நாகூர்மைதீன் தலைமை வகித்தார். சம்சுதீன், முகம்மதுஉசேன், திவான்ஒலி, அனிபா, ரபீக், சேக்மைதீன், அஜீஸ், காஜா, சேக் அப்துல்காதர் முன்னிலை வகித்தனர். நூருல் அமீன் கிராஅத் ஓதினார். பீர்முகம்மது வரவேற்றார். ஷாகுல்உசேன் ஆண்டறிக்கை வாசித்தார். தாஜுதீன் முகம்மதி துவக்கவுரையாற்றினார்.

கடையம் வட்டார ஜமாத்துல் உலமா சபை இணைச்செயலாளர் அபுபக்கர் சித்திக் வாழ்த்துரை வழங்கினார். ஆடுதுறை அவணியாபுரம் ஜேஎம்கே அரபிக்கல்லூரி முதல்வர் ரஹ்மத் ரபீக் பட்டம் வழங்கி, பாராட்டி பேசினார்.  நீடூர் ஜேஎம்எச் அரபிக்கல்லூரி முதல்வர் அப்துல் ரஹ்மான் பாகவி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை இமாம் அப்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார். பொருளாளர் அபுபக்கர் சித்திக் நன்றி கூறினார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக செய்யது அகமது, சேக்மைதீன், சேக்மீரான், நாகூர்மைதீன், கமால்பாட்சா உள்பட முன்னாள் தலைவர் இபுராகிம், லிம்ரா சாகுல், நூரப்பா, மீரான், அனிபா, பீர்முகம்மது மற்றும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Tags : Kallidaikurichi ,Women ,'s ,Arabic College ,
× RELATED ஜி.எஸ்.டி. வரி அல்ல, வழிப்பறி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்