நெல்லையில் இன்று மக்கள் நீதிமன்றம்

நெல்லை, ஏப். 10: நெல்லை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் (10ம் தேதி) இன்று நடக்கிறது. இதில் 2500 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தாண்டு ஏப்ரல் 2வது சனிக்கிழமை உச்சநீதி மன்றம் முதல் தாலுகா நீதிமன்றங்கள் வரை  தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்த தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு  அறிவுறுத்தலின்படி நெல்லை மாவட்டத்தில் நெல்லை உள்பட 9 தாலுகாக்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் 17 அமர்வுகள் மூலம் முதலாவது தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று (10ம் தேதி) நடத்தப்படுகிறது.  இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்கக்கூடிய வழக்குகள் உள்பட 2500 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எனவே பொதுமக்கள் தங்களது வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தால் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் மூலமாக மக்கள் நீதிமன்றத்திற்கு மாற்றி இன்று நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணலாம் என மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான நசீர்அகமது தெரிவித்துள்ளார்.

Related Stories:

>