வாசுதேவநல்லூரில் வைக்கோல் லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்

சிவகிரி, ஏப்.10: வாசுதேவநல்லூர் அம்பேத்கர் சிலை அருகில் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கோல் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. நள்ளிரவில் திடீரென வைக்கோல் லாரி தீப்பிடித்து எரிந்தது.

தகவலறிந்த வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சேக்அப்துல்லா, கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன், தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் வெட்டும்பெருமாள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோலுடன் லாரியும் எரிந்து சேதடைந்தது. இந்த லாரி கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குன்னத்தூரைச் சேர்ந்த நவாஸ் என்பவருக்குச் சொந்தமானது.  இச்சம்பவம் தற்செயலாக நடந்ததா? விஷமிகளின் சதி செயலா? என்பது குறித்து வாசுதேவநல்லூர் இன்ஸ்ெபக்டர் அந்தோணி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>