5 இளம்பெண்கள் திடீர் மாயம் போலீசார் விசாரணை

சேலம், ஏப். 10: சேலத்தில் 5 இளம்பெண்கள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் தேவி (31). வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கவுதம்ராஜ்(21). இவர் கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. சேலம் நரசோதிப்பட்டி பகுதியை சேர்ந்த முருகனின் மனைவி ராஜேஸ்வரி (30). கடந்த 30ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜேஸ்வரி மீண்டும் திரும்பவில்லை. இரும்பாலை பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மனைவி ராஜேஸ்வரி(22). இவர் கடந்த 7ம் தேதி வீட்டை வீட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. கருப்பூரை சேர்ந்தவர் ஹரிதா(22). இவர் ஒன்றரை வயது குழந்தையுடன் கடந்த 4ம் தேதி திடீரென மாயமானார். சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராணி(18). இவரை நேற்றுமுன்தினம் முதல் காணவில்லை. இவர்களை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்த அந்தந்த காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து மாயமானவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>