×

திருச்சி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி, ஏப்.10: திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குணசேகரன் உத்தரவின் பேரில் இன்று (10ம்தேதி) நடக்கிறது. திருச்சி நீதிமன்றத்தில் 6 மக்கள் நீதிமன்ற அமர்வுகளும், மணப்பாறை நீதிமன்றத்தில் 2 அமர்வுகளும், துறையூர், முசிறி, லால்குடி, ரங்கம் ஆகிய நீதிமன்றங்களில் தலா 1 மக்கள் நீதிமன்ற அமர்வும் நடக்கிறது.இதில் வழக்குகளில் சம்மந்தப்பட்ட இரு தரப்பினர்களை அழைத்து சமரச முறையில் பேசி வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும். நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், ஜீவனாம்சம் கோரிய வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு கோரிய வழக்குகள், தொழிலாளர் நல தீர்ப்பாயத்தில் நஷ்டஈடு கோரிய வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் எடுத்துகொள்ளப்பட்டு இருதரப்பினரிடையே பேசி சமரசம் தீர்வு காணப்படும். இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : National People's Court ,Trichy District ,
× RELATED ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சமரச வார விழா சட்ட விழிப்புணர்வு பேரணி