திருவையாறு அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

திருவையாறு,ஏப்.10: திருவையாறு அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவையாறு அடுத்த அம்மன்பேட்டை வடக்கு வெள்ளாள தெருவை சேர்ந்தவர் ரெத்தினகுமார் (55). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு லெட்சுமி(41) என்ற மனைவியும், வீரமணி(21) என்ற மகனும், அமர்தவர்ஷினி (8) என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டு ஹாலில் படுத்திருந்தனர். அப்போது 2 மர்ம நபர்கள் வீட்டின் தெரு கதவை கம்பியால் நெம்பி திறந்து உள்ளே வந்து ஹாலில் படுத்திருந்த லெட்சுமி கழுத்தில் கிடந்த 3½ பவுன் தாலி செயினை அறுத்துக்கொண்டு எதிரே உள்ள வயல் வெளியே தப்பி ஓடினர். கண் விழித்து பார்த்தபோது 2 பேர் ஓடிக்கொண்டிருந்தனர்.இது குறித்து நடுக்காவேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீஸ் டிஎஸ்பி சித்திரவேல், நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தஞ்சையிலிருந்து மோப்ப நாய் ராஜராஜன் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து எதிரே வயல் வழியாக சுமார் 1 கி.மீட்டா ஓடி நின்றது. மேலும் தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர் வருகை தந்து கைரேகை எடுத்து சென்றனர். இது சம்மந்தமாக வீரமணி கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

Related Stories:

More