பழவேற்காடு பகுதியில் குரங்குகள் தொல்லை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குரங்குகள் தொல்லை, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பழவேற்காட்டின் பெரும்பான்மையான பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளம் அமைந்துள்ள காட்டுப்பகுதி அருகாமையில் உள்ளதால் இந்த காட்டுப் பகுதியில் இருந்து நீண்ட காலமாக மான்கள், காட்டுப்பன்றிகள், குரங்குகள், காட்டு எருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி பழவேற்காடு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாக நிகழ்ந்து வருகின்றது.

இந்நிலையில்,  காட்டுப் பன்றிகளின் தாக்குதலுக்கு ஆளான பொதுமக்கள் தற்போது, குரங்குகளில் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த மாதம் வரை சுமார் 40 க்கும் மேற்பட்டோரை குரங்குகள் கடித்து காயப்படுத்தி உள்ளது. கோடைக்காலத்தால்  உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் வாழும் பகுதிக்கு வருகிறது.   இது தொடர்பாக  வனத்துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.   குரங்குகளின் அட்டகாசமும் குறையவில்லை. மேலும், மனிதர்களை தாக்கும் அபாயம் உடைய வன விலங்குகளை பிடித்து ஆந்திர காட்டிற்குள் மீண்டும் அதனை கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் பழவேற்காடு பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். வனத்துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: