காரிமங்கலம் அருகே சாலையோரம் தூங்கியவர் மீது லாரி மோதி பலி

காரிமங்கலம், ஏப்.10: காரிமங்கலம் அடுத்த உச்சம்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(45). இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் சிவகுமார் வெளியூருக்கு சென்று விட்டு, மீண்டும் காரிமங்கலத்திற்கு வந்தார். அப்போது காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த லாரி தூங்கிக்கொண்டிருந்த சிவகுமார் மீது ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More