×

போச்சம்பள்ளியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

போச்சம்பள்ளி, ஏப். 10:  போச்சம்பள்ளியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்து உள்ளதால், விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடிகளில் விட்டு, கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரபரப்பளவில் ஆண்டும் முழவதும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.  தமிழகத்திலேயே மிகப்பெரிய தக்காளி மார்க்கெட் ராயக்கோட்டையில் இயங்கி வருகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு தக்காளி அனுப்பப்படுகிறது.

போச்சம்பள்ளி பகுதியில் மத்தூர், புலியூர், அரசம்பட்டி, தாதம்பட்டி,சந்தூர், குள்ளம்பட்டி, ஆனந்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளியை சாகுபடி செய்துள்ளனர். கோடைகாலம் என்பதால் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளது. கிலோ தக்காளி ₹5 முதல் ₹8க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் விவசாயிகளிடம் ஒரு கிலோ தக்காளியை ஒரு ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் பறிப்பு கூலி, வேன் வாடகைக்கு கூட கட்டுபடி ஆவதில்லை. இதனால் தக்காளியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளனர். கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்னர். மார்க்கெட்டில் விற்பனையாகாத தக்காளியை குப்பையில் கொட்டி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Tags : Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...