×

பொதுமக்கள் அவதி குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம் ஆணையர் உறுதி ஏற்று தற்காலிக வாபஸ்

குளித்தலை, ஏப்.10: அண்ணாநகர் புறவழிச்சாலையை குளித்தலை நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது வருகிற திங்கட்கிழமை புறவழிச்சாலை திறக்கப்படும் என்று ஆணையர் உறுதியளித்ததால் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.குளித்தலை அண்ணாநகர் புறவழிச்சாலை பல ஆண்டுகாலமாக அடைக்கப்பட்டு இருப்பதை திறக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஒரு வார காலத்திற்கு மேலாகியும் குளித்தலை நகராட்சி நிர்வாகம் நீதிமன்ற உத்தரவினை அமல்படுத்தாததை கண்டித்தும், தனி நபருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறியும், உடனடியாக புறவழிச் சாலையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தியும் குளித்தலை பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் கடந்த மாதம் 26ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

வட்டாட்சியர் கலியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கூறி கலைந்து சென்றனர். அதன் பிறகு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அண்ணாநகர் புறவழிச்சாலை நீதிமன்ற உத்தரவுபடி திறக்க வலியுறுத்தி நேற்று குளித்தலை நகராட்சி அலுவலகம் முன்பு மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேச்சுவார்த்தை நடத்திய குளித்தலை நகராட்சி பொறியாளரும் பொறுப்பு ஆணையருமான முத்துக்குமார், வருகிற 12ம் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு அண்ணாநகர் புறவழிச்சாலையை திறக்கப்பட உள்ளதால் அதற்கான போலீஸ் பாதுகாப்பு வழங்ககோரி குளித்தலை டிஸ்பி அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக போராட்டக்காரர்களிடம் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் குளித்தலை நகராட்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தையொட்டி நகராட்சி அலுவலகம் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Public Suffering Baths Municipal ,
× RELATED வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும்...