×

மீண்டும் திறக்க கோரிக்கை கோடை வெயிலை சமாளிக்க கரூரில் பனைநுங்கு விற்பனை அமோகம்

கரூர், ஏப். 10: கரூரில் கோடை வெயிலை சமாளிக்க மக்கள் ஆர்வத்துடன் நொங்குவை வாங்கிச் செல்கின்றனர்.கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதக்கி வருகிறது. மேலும், கடந்த ஒரு வாரமாக தினமும் 100 டிகிரி செல்சியஸை தாண்டியும் வெயில் அடித்து வருகிறது. இதன் காரணமாக, கோடை வெயிலை சமாளிக்க மக்கள் உடம்புக்கு குளிர்ச்சி தரும் இளநீர், தர்ப்பூசணி போன்றவற்றை உட்கொள்கின்றனர்.

மேலும், கரூர் மாவட்டம் அரசு காலனி, வாங்கல், நெரூர் மற்றும் நகராட்சி பகுதிகளில் தினமும் கிராம பகுதிகளில் கொண்டு வரப்பட்ட பனைநுங்கு வகைகளும் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மருத்துவ குணமும், குளிர்ச்சியான தன்மையையும் ஏற்படுத்தும் வல்லமை கொண்ட பனை நுங்கை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். 12 நொங்கு சுளைகள் ரூ. 100 வீதம் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், விலையை பொருட்படுத்தாமல் மக்கள் தேவைக்கு ஏற்ப வாங்கிச் செல்கின்றனர்.

Tags : Panur ,Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...