வாங்கல் சாலையில் பூட்டிக்கிடக்கும் புறக்காவல் நிலையம்

கரூர், ஏப்.10: கரூர் வாங்கல் சாலையில் பூட்டப்பட்ட நிலையில் உள்ள புறக்காவல் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மாவட்டம் அரசு காலனி, ஒத்தக்கடை போன்ற பல்வேறு பகுதிகளில் மணல் குவாரிகளில் இருந்து மணல் எடுத்துச் செல்லும் மணல் லாரிகளின் செயல்பாட்டை கண்காணிக்கும் வகையில் காவிரி ஆற்றுப்பகுதியை ஒட்டியுள்ள கிராம சந்திப்பு சாலைகளில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.

மணல் லாரிகளின் செயல்பாடு மட்டுமின்றி, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிக வேகம் போன்றவை குறித்தும் புறக்காவல் நிலைய போலீசார் கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அரசு காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டுவந்த புறக்காவல் நிலையம் பூட்டப்பட்டு கிடக்கிறது. எனவே, இதனை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்தந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் நலன் கருதி புறக்காவல் நிலையத்தை செயல்படுத்த தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>