அரசுக்கு கோரிக்கை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் மயிலாடுதுறை தொகுதியில் முன்எச்சரிக்கையாக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

மயிலாடுதுறை, ஏப்.10: மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலின்போது 20% வாக்கு இயந்திரங்கள் என 62 மற்றும் 62 விவிபேட் இயந்திரம் முன் எச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்து. அவைகள் வாக்குப்பதிவுமுடிந்ததும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது, தற்போது அதன் தேவை இல்லை என்பதால் அவற்றை மயிலாடுதுறை தேர்தல் தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது, மயிலாடுதுறை தனியார் தொழில்நுட்பக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 வாக்கு எந்திரங்கள் மற்றும் 62 விவிபேட் இயந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சேகரிக்கப்பட்டு வாகனம் மூலம் மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories:

More