×

இவ்வாறு அவர் கூறினார். ஜெயங்கொண்டத்தில் கொரோனா தொற்று விழிப்புணர்வு பிரசாரம்

ஜெயங்கொண்டம்,ஏப்.10: தமிழகத்தில் மீண்டும் உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதை முன்னிட்டு ஜெயங்கொண்டத்தில் வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட கடைவீதிகளில் பேருந்து நிலையம் 4 ரோடு விருத்தாசலம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் தாசில்தார் வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கி மூலம் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், கடைவீதியில் வாகனத்தில் செல்வோர் ஆகியோர் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் மாஸ்க் இல்லாமல் செல்லும் பொதுமக்களுக்கு ரூ.200ம் கடைகளுக்கு ரூ. 5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் கொரோனா தொற்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Tags : Corona Infection Awareness Campaign ,Jayangonda ,
× RELATED அமைச்சர் சிவசங்கர் காரில் பறக்கும்படை சோதனை