×

பங்குனி கடைசி வெள்ளியை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஜெயங்கொண்டம், ஏப். 10: ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள அம்மன் கோயில்களில் பங்குனி கடைசி வெள்ளி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயில் உள்ள துர்க்கை அம்மன் மகாமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், செங்குந்தபுரம் மாரியம்மன், பொன்பரப்பி துரோபதி அம்மன், மாரியம்மன், சாமுண்டீஸ்வரி அம்மன், இலையூர் செல்லியம்மன், சின்னவளையம் துரோபதி அம்மன் உள்ளிட்ட பல கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு பக்தர்கள் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள நாச்சியார் குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து திருச்சிசிதம்பரம் சாலை வழியாக சென்று ராஜவீதி வழியாக கோயிலை அடைந்து கோயிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம்் மற்றும் பால்் காவடி, எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். அதன் பின்னர் அம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலுடன் திரவிய பொடி, மாவு பொடி, மஞ்சள்-்் சந்தனம், எலுமிச்சை தயிர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் தீபாராதனைை காட்டி ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

Tags : Cholapuram ,Gangaikonda ,Panguni ,
× RELATED காமதகனமூர்த்தி