×

கலெக்டரிடம் கோரிக்கை மனு அரியலூர் கலெக்டர் ேவண்டுகோள் பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் அலுவலர் ஆய்வு

பெரம்பலூர்,ஏப்.10: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வெங்கட பிரியா ஆய்வு செய்தார்.தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த 6ம்தேதி காலை 7மணி முதல் இரவு 7மணிவரை நடைபெற்றது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 9 வேட்பாளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 816 இடங்களில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட் டு தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கும், மாவட்டதேர்தல் அலுவலரான கலெக்டர் வெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின்போது குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கர், முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Collector Ariyalur Collector Request Election Officer ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி