திரளான பக்தர்கள் பங்கேற்பு பொன்னமராவதி அமரகண்டான் குளத்தை சீரமைத்து பூங்கா அமைக்க வேண்டும்

பொன்னமராவதி,ஏப்.10: பொன்னமராவதியில் உள்ள அமரகண்டான் குளத்தை சீர் செய்து பூங்கா அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமயம் சட்டமன்றத்தொகுதியின் பெரிய நகரமாக பொன்னமராவதி உள்ளது. இங்கு மக்கள் பொழுபோக்குவதற்கு எந்த இடமும் இல்லை. பொன்னமராவதி நகரின் மையப்பகுதியில் அமரகண்டான் குளம் உள்ளது. இக்குளத்தின் மேற்குபுறம் காவல்நிலையம், சிவன்கோயில், பத்திர எழுத்தர்கள் அலுவலகம் உள்ளது. தெற்குப்புறம் பட்டமரத்தான் கோயில், பத்திர பதிவு அலுவலகம், பேரூராட்சி அலுவலகம்,தபால்நிலையம், நூலகம், பெட்ரோல் பங்க், கிழக்குப்புறம் வருவாய்ஆய்வாளர் அலுவலகம், பேருந்து நிலையம் மற்றும் கடைகள் என நான்கு புறமும் முக்கிய அலுவலகம் கோயில்கள் என உள்ளது. இந்த குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் இடிந்துள்ளது. மேலும் ஊரின் மையப்பகுதியில் அழகாக இருக்க வேண்டிய குளம் தூய்மையற்ற நிலையில் உள்ளது. இந்த குளத்தை சீர் செய்து நான்கு புறமும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், இப்பகுதியில் பொழுதுபோக்கு இடங்கள் இல்லை. எனவே இந்த குளத்தைச்சுற்றி பூங்கா அமைத்து நடைபயிற்சி பாதை அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>