×

கலெக்டர் திடீர் ஆய்வு திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா ரத்து சித்திரை

திருத்துறைப்பூண்டி, ஏப்.10: திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவில் சித்திரை பெருந்திருவிழா கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு கோவில் திருவிழாவுக்கு தடை விதித்ததையடுத்து கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த கோவில். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தொடங்கும் நாளில்தான் பிறவிமருந்தீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெறும் என்பது சிறப்பு.

இப்பொழுது கொரோனா பரவல் காரணமாக கோவில் திருவிழாக்கள் நடத்த அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் திருவிழா கடந்த 6ம்தேதி அனுக்ஞைவிக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்ய நிலையில் நேற்று 9ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி வரும் 23ம் தேதி தியாகராஜர் தேரோட்டமும் மொத்தம் நடை 26 நாட்கள் திருவிழா நடைபெற இருந்தது. இந்த நிலையில் கோவில் நிர்வாகம் தமிழக அரசு அறிவுறுத்தலின்படி திருவிழாவை ரத்து செய்துள்ளது. ஆனால் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சுவாமி தரிசனம் செய்யவும், திருவிழா மண்டகப்படிதாரர்கள் மண்டகப்படி நித்திய பூஜைகள் ஏற்பாடு செய்தால் அதனை நடத்தி கொடுக்க கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டதை போல் இந்த ஆண்டும் திருவிழா ரத்துசெய்துள்ளது பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Birth Marundeeswarar Temple Chithirai festival ,Chithirai ,
× RELATED மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும்...