முத்துப்பேட்டை கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் சங்கலி திருட்டு

முத்துப்பேட்டை, ஏப்.10: முத்துப்பேட்டையில் கோயிலில் அம்மன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் செயினை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே திருத்துறைப்பூண்டி சாலையோரத்தில் கூந்தபனை பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த பாரிஜாதகம் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு கோயில் கதவை பூட்டி சென்ற பூசாரி பாரிஜாதகம் நேற்று கோயிலை திறக்க வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே இருந்த சாமியை பார்த்தபோது கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க செயின் திருட்டு போயிருந்தது. தெரிந்தது. இதனையடுத்து பூசாரி பாரிஜாதகம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் திருட்டு நடந்த கோயிலை நேரில் பார்வையிட்டு சாமி கழுத்தில் இருந்த செயினை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர்.

Related Stories:

More