கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஊராட்சி செயலாளர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் பிடிஓ அறிவுரை

கலசபாக்கம், ஏப்.10: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஊராட்சி செயலாளர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று பிடிஓ கூறினார்.கலசபாக்கம் பிடிஓ அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று ஊராட்சி செயலாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிடிஓ மகாதேவன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில்,கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணியில் ஊராட்சி செயலாளர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். தங்கள் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் விசேஷங்களுக்கு 100 நபர்களுக்கு மேல் வந்தால் அனுமதிக்கக்கூடாது. அதேபோல் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திருவிழா காலங்களில் கூட்டங்களை சேர்க்கக்கூடாது. இறுதி சடங்கு நிகழ்ச்சிகளிலும் கூட்டத்தை சேர்க்கக்கூடாது. சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும். கிராம ஊராட்சிகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகளிலும் ஈடுபட வேண்டாம் என்றார்.கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர். முடிவில் பிடிஓ விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Related Stories:

>