×

கீழ்பென்னாத்தூரில் மருத்துவ குணம் கொண்ட விலாம்பழம் விற்பனை

கீழ்பென்னாத்தூர், ஏப்.10: கீழ்பென்னாத்தூரில் கோடை வெயிலை சமாளிக்க மருத்துவ குணம் கொண்ட விலாம்பழம் விற்பனை அதிகரித்துள்ளது.கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கோடையை சமாளிக்கும் வகையில் மருத்துவ குணம் வாய்ந்த விலாம்பழம் விற்பனை அதிகரித்துள்ளது. இதையடுத்து கீழ்பென்னாத்தூர்- அவலூர்பேட்டை சாலை, திருவண்ணாமலை சாலை மற்றும் திண்டிவனம் சாலை போன்ற பகுதிகளில் தற்போது வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விலாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலை சமாலிக்கும் வகையிலும், மருத்துவ குணம் வாய்ந்த வகையிலும் உள்ள இந்த விலாம் பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். கீழ்பென்னாத்தூர் பகுதியில் தற்போது விற்பனை செய்யப்படும் விலாம்பழங்கள் ஓசூர் பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டு கிலோ ₹25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மேலும், கோடை காலம் முழுவதும் இந்த பழங்களின் விற்பனை அதிகமாக இருக்கும் மற்றும் மக்களின் தாக்கத்தை இப்பழம் தனிக்கும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

Tags : Lower Pennathur ,
× RELATED ஆரணி, கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு...