தஞ்சை ரயில் நிலையத்தில் கலைநிகழ்ச்சி மூலம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு

தஞ்சை, ஏப்.9: தஞ்சை ரயில் நிலையத்தில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பயணிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருச்சி மண்டல ரயில்வே பாதுகாப்பு படை சீனியர் கமிஷனர் ராமகிருஷ்ணன், உதவி கமிஷனர் சின்னதுரை ஆகியோர் உத்தரவின்பேரில் தஞ்சை பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலம், மனோகரன் முன்னிலையில் தஞ்சை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அப்போது சென்னையிலிருந்து வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தஞ்சை ரயில் நிலைய நடைமேடையில் பாதுகாப்பு படை கலைக்குழுவினர் தப்பாட்டம் அடித்தும், ஆடி பாடியும், தத்ரூபமாக நடித்து காட்டியும் கொரோனா வராமல் தடுக்க எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நன்றி தெரிவித்த கலெக்டர் தஞ்சை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற்றதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து வாக்காளர்கள், அனைத்து அரசியல் கட்சியினர், அனைத்து துறை அலுவலர்கள், காவல்துறையினருக்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Related Stories:

>