பாபநாசத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

பாபநாசம்,ஏப்.9: பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பாபநாசம் நீதி மன்றத்தில் வருகின்ற 10ம் தேதி காலை 10 மணியளவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகின்றது. இதில் ஜீவனாம்சம், காசோலை மோசடி, குடும்பவன்முறை உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்படும். பொதுமக்கள் தங்கள் வக்கீலுடன் பங்கேற்று வழக்குகளுக்கு சுமுகத்தீர்வு காணலாம். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>