திருமயம் அருகே ஆட்டோ மோதி வாலிபர் பரிதாப சாவு

திருமயம். ஏப்.9: திருமயம் அருகே பைக் மீது லோடு ஆட்டோ மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சேதுராப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி மகன் திருப்பதி (27). கூலி தொழிலாளி. இந்நிலையில் நேற்று திருப்பதி தனது பைக்கில் சேதுராப்பட்டியிலிருந்து திருமயத்திற்கு சென்றார். அப்போது திருமயத்தில் இருந்து நெல் மூட்டை ஏற்றிக்கொண்டு ராங்கியம் சென்ற லோடு ஆட்டோ கொள்ளகாட்டுப்பட்டி முக்கத்தில் திரும்பும்போது திருப்பதி ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் திருப்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் போலீசார் திருப்பதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, பைக் மீது மோதிய லோடு ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>