×

கல்வாடி அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் அதிக வாக்குப்பதிவு

பெரம்பலூர்,ஏப்.9: பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள 428 வாக்குச்சாவடிகளில் மிகமிக அதிகமாக கல்பாடி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் 90.36 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. மிகமிக குறைவாக பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் 66.76சதவீதம் பதிவாகி உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் 165 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 428 வாக்குச்சாவடிகளில் 6ம்தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. 3,02,692 மொத்த வாக்காளர்களில் 2,36,707பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி பெரம்பலூர் தனி சட்டமன்ற தொகுதியில் 78.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள 428 வாக்குச்சாவடிகளில், கல்பாடி ஊராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண் 274ல் பெரம்பலூர் தொகுதியிலேயே மிகமிக அதிகமான சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறிப்பாக இங்கு 482 ஆண் வாக்காளர்கள், 514 பெண் வாக்காளர்கள் என மொத்தமுள்ள 996 வாக்காளர்களில், ஆண்கள் 420 பேர்களும், பெண்கள் 480 பேர்களும் என மொத்தம் 900 பேர் வாக்களித்துள்ளனர். ஆண்கள் வாக்கு சதவீதம் 87.14ஆகும். பெண்கள் வாக்கு சதவீதம் 93.39 ஆகும். இதன்படி 996 வாக்காளர்களில் 900 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். பதிவான மொத்த வாக்கு சதவீதம் 90.36ஆகும்.

பெரம்பலூர் நகராட்சி 11வது வார்டிலுள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண் 181ல் பெரம்பலூர் தொகுதியிலேயே மிகமிக குறைந்த சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறிப்பாக இங்கு 188 ஆண் வாக்காளர்கள், 182 பெண் வாக்காளர்கள் என மொத்தமுள்ள 370 வாக்காளர்களில், ஆண்கள் 131 பேர்களும், பெண்கள் 116 பேர்களும் என மொத்தம் 247 பேர் வாக்களித்துள்ளனர். ஆண்கள் வாக்கு சதவீதம் 69.68ஆகும்.பெண்கள் வாக்கு சதவீதம் 63.74 ஆகும். இதன்படி 370 வாக்காளர்களில் 247 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். பதிவாகியுள்ள மொத்த வாக்குகள் சதவீதம் 66.76ஆகும்.

Tags : Kalwadi ,Government ,Primary ,School ,
× RELATED திருமங்கலம் அருகே அரசு பள்ளியில்...