×

நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரிக்க மாவட்ட நிர்வாகம்தான் காரணம்

நாகை, ஏப்.9: நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் தான் காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமான போக்குதான் என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். முககவசம் அணியாமல் செல்வோர்கள் மீது அபராதம் என்பது விதிக்கப்படுவது இல்லை. தேர்தல் காலங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்காமல் வீடுவீடாக சென்று வாக்குகள் சேகரித்தனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் நாகையில் உள்ள சுற்றுலா தலங்களான நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதுபோன்ற முறையான கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை. இதனால் நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இனிமேல் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Naga district ,
× RELATED நாகை மாவட்டத்தில் பண்ணை குட்டைகளில்...