திருப்பூர் செல்லம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை

திருப்பூர்,ஏப்.9:திருப்பூரில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் செல்லம் நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகிறது. அரசும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் கொரோனா பாதிப்பு ஒரே இடங்களில் கூடுதலாகிறது. திருப்பூரில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது. சமீப காலமாக அரசு சார்பில் மேலும் சில நிபந்தனைகளை கடுமையாக்கியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் கொரோனா தொற்று அதிகமாக உள்ள பகுதியான செல்லம் நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நேற்று சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதே போல பல்லடம் ரோட்டிலுள்ள வீரபாண்டி பகுதியில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories:

>