×

ஊட்டி,குன்னூர்,கூடலூர் தொகுதிகளில் 1,76,896 பேர் வாக்களிக்கவில்லை

ஊட்டி,ஏப்.9: நீலகிரி  மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் 2 லட்சத்து 82 ஆயிரத்து 623 ஆண்  வாக்காளர்கள், 3 லட்சத்து 4 ஆயிரத்து 319 பெண் வாக்காளர்கள், 8 மூன்றாம்  பாலினத்தவர்கள் என மொத்தம் 5 லட்சத்து 86 ஆயிரத்து 950 வாக்காளர் உள்ளனர்.  இதனிடையே கடந்த 6ம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மூன்று  தொகுதிகளில் பதிவான வாக்குகள் விவரம்: ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 98  ஆயிரத்து 690 ஆண்கள், 1 லட்சத்து 07 ஆயிரத்து 186, மூன்றாம் பாலினத்தவர் 6  பேர் என மொத்தம் 2 லட்சத்து 05 ஆயிரத்து 882 பேர் உள்ளனர். இதில் 1  லட்சத்து 39 ஆயிரத்து 626 வாக்குகள் பதிவாகியுள்ளது. 69 ஆயிரத்து 232  ஆண்களும், 70 ஆயிரத்து 394 பெண்களும் வாக்களித்துள்ளனர்.
கூடலூர்  சட்டமன்ற தொகுதியில் 92 ஆயிரத்து 366 ஆண்களும், 96 ஆயிரத்து 789 பெண்களும்  என 1 லட்சத்து 89 ஆயிரத்து 155 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 36  ஆயிரத்து 496 வாக்குகள் பதிவாகியுள்ளன. 67 ஆயிரத்து 398 ஆண்கள், 69  ஆயிரத்து 98 பெண்களும் வாக்களித்துள்ளனர்.

குன்னூர் தொகுதியில் 91  ஆயிரத்து 567 ஆண்கள், 1 லட்சத்து 344 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் என  மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 913 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1  லட்சத்து 33 ஆயிரத்து 932 வாக்குகள் பதிவாகின. இதில் 65 ஆயிரத்து 863  ஆண்கள், 68 ஆயிரத்து 68 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர்  வாக்களித்துள்ளனர். 3 தொகுதிகளிலும் சேர்த்து 4 லட்சத்து 10 ஆயிரத்து 054  வாக்குகள் பதிவாகியுள்ளன. 1 லட்சத்து 76 ஆயிரத்து 896 பேர்  வாக்களிக்கவில்லை. மூன்று தொகுதிகளிலும் சேர்த்து பதிவான வாக்குகளில் பெண்  வாக்காளர்களே அதிகமாக வாக்களித்துள்ளனர். ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவர்  மட்டுமே வாக்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Ooty ,Coonoor ,Cuddalore ,
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்