கொரோனா 2வது அலை பங்குனி பொங்கல் திருவிழாவிற்கு தடை

ராஜபாளையம், ஏப். 9:  ராஜபாளையம் பகுதியில் நடைபெறும் பங்குனி பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது, ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயிலில்  கொடியேற்றப்பட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலிலும் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்தது. இங்கு நடைபெறும் திருவிழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்  தீ மிதிப்பது வழக்கம். குறிப்பாக ராஜபாளையம் தாலுகா முகவூர், தளவாய்புரம் பகுதிகளில்  மார்ச் 14 ம் தேதி கொடியேறி  ஏப். 4,5,6,7 ஆகிய தேதிகளில் திருவிழா நடக்க இருந்தது. இந்நிலையில்  ஏப். 6ம் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் காரணமாக  மார்ச் 21 ம்தேதி கொடியேற்றத்துடன் ஏப்.11 காப்புகட்டுதல், 12 ம்தேதி அக்கினிசட்டி,ஏப். 13 ம்தேதி பூக்குழி திருவிழா நடைபெற இருந்தது. இதற்காக பக்தர்கள் 21 நாள் விரதமிருந்து வருகின்றனர்.இந்த நிலையில் கொரோனா 2வது அலை பரவல் காரணமாக திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் போதிய கட்டுப்பாடுகளுடன் பங்குனி பொங்கல் திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>