மாரியம்மன் கோயில் விழாவில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

மானாமதுரை, ஏப்.9: மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த பங்குனித் திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் தீ மிதித்தும் வேண்டுதல் நிறைவேற்றினர். கோயிலில் கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் பங்குனித் திருவிழா தொடங்கியது. அப்போது ஏராளமான பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற காப்புக்கட்டி விரதம் தொடங்கினர். விழா நாட்களில் தினமும் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய வைபவமாக நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பொங்கல் வைபவத்தை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர். மதியம் கோயில் முன்பு நடந்த அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் இரவு தீச்சட்டி எடுத்து கோயிலைச்சுற்றி வந்தும் தீ மிதித்தும் வேண்டுதல் நிறைவேற்றினர்.

Related Stories:

>