×

நான்கு தொகுதிகளிலும் ஆண்களை விட 54 ஆயிரம் பெண்கள் அதிகமாக வாக்களிப்பு

சிவகங்கை, ஏப்.9: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்களைவிட 54 ஆயிரத்து 971 பெண் வாக்காளர்களே அதிகமாக வாக்களித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை(தனி), திருப்பத்தூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் 11லட்சத்து 87ஆயிரத்து 115பேர் ஆகும். இதில் பெண்கள் 6 லட்சத்து 3ஆயிரத்து 944. ஆண்கள் 5 லட்சத்து 83ஆயிரத்து 97. பிற பாலினத்தவர் 74நபர்கள் ஆவர். இதில் ஆண்கள் 3லட்சத்து 81ஆயிரத்து 29 பேரும், பெண்கள் 4 லட்சத்து 36ஆயிரம் பேரும், பிறர் 21 பேரும் என மொத்தம் 8லட்சத்து 17ஆயிரத்து 50பேர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்காளர்களில் ஆண்களை விட 20ஆயிரத்து 847பெண் வாக்காளர்கள் மட்டுமே கூடுதலாக உள்ளனர். ஆனால் பதிவான வாக்குகளில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் 54ஆயிரத்து 971பேர் கூடுதலாக வாக்களித்துள்ளனர். காரைக்குடி தொகுதியில் 13ஆயிரத்து 151பெண்கள், திருப்பத்தூர் தொகுதியில் 17ஆயிரத்து 343 பெண்கள், சிவகங்கை தொகுதியில் 15ஆயிரத்து 472 பெண்களும் ஆண்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக வாக்களித்துள்ளனர். மானாமதுரை(தனி) தொகுதியில் 9ஆயிரத்து 5பெண்கள் ஆண்களைவிட கூடுதலாக வாக்களித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்களைவிட பெண்களே கூடுதலாக வாக்களித்துள்ளது அரசியல் கட்சியினரிடையே பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு