அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

சாயல்குடி, ஏப்.9: முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி சீலைக்காரி அம்மன் கோயிலில் வருடாந்திர பங்குனி மாத திருவிழா நடந்தது. சித்திரங்குடி சீலைக்காரி அம்மன் கோயில் வருடாந்திர பங்குனி மாத பொங்கல் மற்றும் பால்குடம் திருவிழா காப்பு கட்டுதலுடன் கடந்த வாரம் துவங்கியது. மூலவரான அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. கிராமமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். 10க்கும் மேற்பட்ட ஆடுகள் நேர்த்திக் கடனுக்காக வெட்டப்பட்டு ஒரே சமையலாக செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories:

>