மூன்று போலீசார் மீது வரதட்சணை வழக்கு

திருமங்கலம், ஏப்.9:  மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 3 போலீஸ்காரர்கள் மீது மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் அருகேயுள்ள ஓ.ஆலங்குளத்தை சேர்ந்தவர் குருசாமி மகள் ராஜலட்சுமி(20). இவருக்கும் திருமங்கலத்தை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் குருசாமிக்கும்(30) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ராஜலட்சுமிக்கு பெற்றோர் 25 பவுன் நகை ரூ.3 லட்சம் ரொக்க பணம் வரதட்சணையாக கொடுத்தனர். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே ராஜலட்சுமியின் தந்தை குருசாமி இறந்துவிட்டார். இந்நிலையில் கணவர் குருசாமி, அவரது பெற்றோர்கள் பழனிசாமி, மணிமேகலை, சகோதரர்கள் சரவணன், மாரிமுத்து ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜலட்சுமியை கொடுமைப்படுத்தியுள்ளனர். இது குறித்து ராஜலட்சுமி திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் ஆயுதப்படை போலீஸ்காரர் குருசாமி, அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சரவணன், மாரிமுத்து ஆகியோரும் போலீஸ்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>