மாநில கராத்தே போட்டி திருமங்கலம் மாணவர்கள் சாதனை

திருமங்கலம், ஏப்.9:  கொடைக்கானலில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் திருமங்கலம் பள்ளி மாணவ, மாணவியர் பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். உலக பாரம்பரிய சோடோகான் கராத்தே சம்மேளனம் சார்பில் கொடைக்கானலில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட இந்த போட்டிகளில் கட்டா, கற்பனை சண்டைபிரிவு, குழு கட்டா பிரிவுகளில் திருமங்கலம் மாணவ, மாணவியர் பல்வேறு பரிசுகளை வென்றனர். திருமங்கலம் டெடிபள்ளி மாணவன் தர்ஷன் மற்றும் நந்துபிரசாம் ஆகியோர் கட்டாவில் முதல் பரிசை பெற்றனர். இதே பள்ளி மாணவன் நிஜானந்த் குழு கட்டாவில் முதல்பரிசை பெற்றார். பிகேஎன் பள்ளி மாணவர் திருமலை கட்டாவில் இரண்டாம் பரிசை பெற்றார். மாணவன் மாதவன், மாணவி இந்திரா, விஜயலட்சுமி, ஜோஷ்வா, கணபதி ஸ்ரீராம், கோகுல் கட்டாவில் முதல்பரிசை பெற்றனர் மாணவி துதிக்ஷா ஸ்மிருதி குழு கட்டாவில் முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தங்கப்பதக்கம், வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது. கராத்தே சம்மேளனத்தின் தலைவர் ஈஸ்வர்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார். போட்டி ஏற்பாடுகளை கரோத்தே மாஸ்டர்கள் பொன்னுச்சாமி ராஜா, திருப்பதி செய்திருந்தனர்.

Related Stories:

>