திண்டுக்கல் மாவட்டத்தில் 9,763 பேர் தபால் ஓட்டு போட்டனர்

திண்டுக்கல், ஏப். 9: திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம், திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை ஆகிய 7 தொகுதிகளில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் போலீசார் தேர்தல் பணியாற்றினர். இவர்களில் 15 ஆயிரத்து 107 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பப்படிவம் மற்றும் வாக்குச்சீட்டு பெற்றிருந்தனர். மேலும், தபால் வாக்குகளை அளிக்க வசதியாக பயிற்சி முகாம்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் 8,217 பேரும் போலீசார் 1,676 தபால் ஓட்டுபோட்டுள்ளனர். மொத்தம் 9 ஆயிரத்து 791 பேர் தபால் வாக்களித்துள்ளனர்.இந்த தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் உள்ளன. மேலும் மே 2ம் தேதி வாக்கு எண்ணும் நேரத்திற்கு முன்பு வரை தபால் ஓட்டு அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே, மீதமுள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>